வினா - விடை வங்கி... விஜயநகரப் பேரரசு! - 2

விஜயநகரப் பேரரசு - 2 வினா-விடை வங்கி...
விஜயநகரப் பேரரசு..
விஜயநகரப் பேரரசு..
Published on
Updated on
2 min read

1. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் முதல் தலைநகராக இருந்த நகரம் எது?

(a) அனெகொண்டி

(b) ஹம்பி

(c) பெனுகொண்டா

(d) சந்திரகிரி

2. ஹம்பி எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

(a) கிருஷ்ணா

(b) துங்கபத்ரா

(c) யமுனை

(d) கோதாவரி

3. ஹம்பி தற்போது எந்த மாநிலத்தில் அமைந்திருக்கிறது?

(a) கேரளம்

(b) தமிழ்நாடு

(c) ஆந்திரம்

(d) கர்நாடகம்

4. கிருஷ்ண தேவராயர் அரசவைக்கு வந்த போர்ச்சுகீசிய தூதுவர் யார்?

(a) டொமிங்கோ பயஸ்

(b) இபின் பதூதா

(c) நிகிடின்

(d) அப்துர் ரசாக்

5. விஜயநகரப் பேரரசின் அழிவுக்குக் காரணமான போர் எது?

(a) ராய்ச்சூர் போர்

(b) ஹல்திகாட்டி போர்

(c) தலைக்கோட்டை போர்

(d) ஆற்காடு போர்

6. புக்கரின் மகன் பெயர் என்ன?

(a) குமார கம்பண்ணா

(b) சதாசிவ ராயர்

(c) முதலாம் புக்க ராயன்

(d) கஜப்பேட்டைக்காரா

7. முதலாம் தேவராயர் காலத்தில் வந்த வெனீஸ் நகரப் பயணி யார்?

(a) நிகிடின்

(b) நிக்கோலஸ் டி கோண்டி

(c) இபின் பதூதா

(d) நுனிஸ்

8. மதுரா விஜயம் யாருடைய வரலாற்றை பற்றிக் கூறுகிறது?

(a) மதுரயாஜி மல்லனா

(b) சதாசிவ ராயர்

(c) குமார கம்பண்ணா

(d) மாலிக் கபூர்

9. ஹரவிலாசம் என்ற படைப்பை எழுதியவர் யார்?

(a) மதுரயாஜி மல்லனா

(b) நந்தி திம்மண்ணா

(c) ஸ்ரீநாதா

(d) ஐயலாருஜு ராமபத்ருடு

10. சங்கம மரபின் முக்கிய அரசர் யார்?

(a) இரண்டாம் தேவராயர்

(b) கிருஷ்ண தேவராயர்

(c) அச்சுத ராயர்

(d) சதாசிவ ராயர்

11. இரண்டாம் தேவராயர் காலத்தில் அரசவைக்கு வந்த பாரசீகப் பயணி யார்?

(a) மெகஸ்தனிஸ்

(b) அப்துல் ரசாக்

(c) ஃபா-ஹியென்

(d) மார்கோ போலோ

12. இரண்டாம் தேவராயர் எழுதிய வடமொழிப் படைப்பு என்ன?

(a) உஷாபரிணயம்

(b) மகா நாடக சுதநுதி

(c) ஜாம்பாவதிகல்யாணம்

(d)  அமுக்தமால்யதா

13. இரண்டாம் தேவராயரின் இயற்பெயர் என்ன?

(a) கஜப்பேட்டைக்காரா

(b) ஹரி ஹரராயர்

(c) கம்பண்ணன்

(d) கீர்த்தி வர்மன்

14. சங்கம மரபின் கடைசி அரசர் யார்?

(a) ராமச்சந்திர ராயன்

(b) விருபாக்‌ஷா

(c) வீரவிஜய புக்கராயன்

(d) தேவ ராயன்

15. சாளுவ மரபை தோற்றுவித்தவர் யார்?

(a) வீர நரசிம்மர்

(b) இம்மிடி நரசிம்மர்

(c) சாளுவ நரசிம்மர்

(d) நரச நாயக்கர்

16. சாளுவ நரசிம்மரின் மகன் யார்?

(a) இம்மிடி நரசிம்மர்

(b) வீர நரசிம்மர்

(c) நரச நாயக்கர்

(d) ஹரிஹரர்

17. இம்மிடி நரசிம்மர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த போர்த்துக்கீசியப் பயணி யார்?

(a) வாஸ்கோடகாமா

(b) நிக்கோலஸ் டி கோண்டி

(c) இபின் பதூதா

(d) நுனிஸ்

18. துளுவ மரபைத் தோற்றுவித்தவர் யார்?

(a) வீர நரசிம்மர்

(b) நரச நாயக்கர்

(c) முதலாம் தேவராயர்

(d) அச்யுத் தேவராயர்

19. வீர நரசிம்மரின் தந்தை பெயர் என்ன?

(a) நரச நாயக்கர்

(b) முதலாம் நரசிம்மன்

(c) அச்யுத் தேவராயர்

(d) விஸ்வநாத நாயக்கர்

20. அபிநவ போஜர் என்றழைக்கப்படக் கூடியவர் யார்?

(a) ஹரிஹரர்

(b) முதலாம் தேவராயர்

(c) விஸ்வநாத நாயக்கர்

(d) கிருஷ்ண தேவராயர்

21. பாண்டுரங்க மகாமாத்யம் என்ற நூலை எழுதியவர் யார்?

(a) தெனாலிராமன்

(b) அல்லசானி பெத்தனா

(c) மடையகரி மல்லனா

(d) பிங்கலி சூரனா

22. கிருஷ்ண தேவராயர் எந்த முறையில் ஆட்சி செய்தார்?

(a) சர்வாதிகார ஆட்சி

(b) மக்களாட்சி

(c) ராணுவ ஆட்சி

(d) நாயங்கரா முறை

23. கிருஷ்ண தேவராயர் காலத்தில் மதுரைக்கு வந்த நாயக்கர் யார்?

(a) விஸ்வநாத நாயக்கர்

(b) கிருஷ்ணப்ப நாயக்கர்

(c) சென்னப்ப நாயக்கர்

(d) விஜய கோபால நாயக்கர்

24. கிருஷ்ண தேவராயர் பாமினி பேரரசை வென்று வெற்றித் தூணை நிறுவிய இடம் எது?

(a) கட்டாக்

(b) பெல்காம்

(c) சிம்மாச்சலம்

(d) ராஜமகேந்திரவரம்

25. கிருஷ்ண தேவராயர் காலத்தில் கோவாவைக் கைப்பற்றிய போர்த்துக்கீசிய ஆளுநர் யார்?

(a) அல்புகர்க்

(b) நினோ டா குன்ஹா

(c) இபின் பதூதா

(d) பிரான்சிஸ்கோ டி அல்மேய்டா

விடைகள்

1. (a) அனெகொண்டி

2. (b) துங்கபத்ரா

3. (d) கர்நாடகம்

4. (a) டொமிங்கோ பயஸ்

5. (c) தலைக்கோட்டை போர்

6. (a) குமார கம்பண்ணா

7. (b) நிக்கோலஸ் டி கோண்டி

8. (c) குமார கம்பண்ணா

9. (c) ஸ்ரீநாதா

10. (a) இரண்டாம் தேவராயர்

11. (b) அப்துல் ரசாக்

12. (b) மகா நாடக சுதநுதி

13. (a) கஜப்பேட்டைக்காரா

14. (b) விருபாக்‌ஷா

15. (c) சாளுவ நரசிம்மர்

16. (a) இம்மிடி நரசிம்மர்

17. (a) வாஸ்கோடகாமா

18. (a) வீர நரசிம்மர்

19. (a) நரச நாயக்கர்

20. (d) கிருஷ்ண தேவராயர்

21. (a) தெனாலிராமன்

22. (d) நாயங்கரா முறை

23. (a) விஸ்வநாத நாயக்கர்

24. (c) சிம்மாச்சலம்

25. (a) அல்புகர்க்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com