

காஸாவில் இருந்த கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை (ஜன. 26) தெரிவித்துள்ளது. இதையடுத்து, காஸாவில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் விரைவில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸாவில் நீடித்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பல நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் - இஸ்ரேல் தரப்பு சம்மதம் தெரிவித்ததையடுத்து, காஸாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலானது. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக அந்நாட்டின் கடைசி பிணைக்கைதியின் உடல் பாகங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே.
இஸ்ரேலின் காவல் துறையில் பணியாற்றிய வீலி என்ற நபர் ஹமாஸால் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் பாகங்களை தேடி மீட்பதில் இழுபறி நீதித்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 26) அவரது உடல் பாகங்கள் முழுமையாக மீட்கப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதிபடுத்தியிருக்கிறது.
இதையடுத்து, காஸாவில் போர் நிறுத்தம் இரண்டாம் கட்டத்துக்குள் செல்லவிருக்கிறது. அதன்படி, காஸாவை நிர்வகிக்க பாலஸ்தீன அரசு அமைக்கப்படும் மற்றும் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச நிலைத்தன்மைப் படை ஒன்றும் உருவாக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.