தேர்தலில் வெற்றி பெற ஆர்எஸ்எஸ் ஆதரவை நாடினார் சதீசன்! சங்க பரிவார் தலைவர் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் மீதான குற்றச்சாட்டு பற்றி...

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸின் வி.டி.சதீசன் (கோப்புப் படம்). | ஆர்.வி.பாபு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸின் வி.டி.சதீசன் (கோப்புப் படம்). | ஆர்.வி.பாபு
கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஆர்எஸ் எஸ் அமைப்பின் ஆரவை மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் நாடியதாக சங்க பரிவார் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற சங்க பரிவார் அமைப்பான ஹிந்து ஐக்கிய வேதியின் தலைவர் ஆர்.வி.பாபு, தொலைக்காட்சி ஒன்றுக்கு சனிக்கிழமை அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் தாம் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கடந்த காலங்களில் மறுத்துவந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தற்போது அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பொய் சொல்வது யார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. அதேபோன்று கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் களில் வெற்றி பெற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவை நாடியதை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு எதிர் காலத்தில் சதீசன் தள்ளப்படுவார். கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டு தேர்தல்களில் எடுத்த நிலைப்பாட்டை காங்கிரஸ் தற்போது எடுக்கவில்லை. சதீசன் கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ராஜுவிடம் பரிதாபகரமாகத் தோற்றார். அதன்பின் தேர்தலில் வெற்றி பெற அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவை நாடினார்.
தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலில் சதீசன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நான் கருதுகிறேன் என்றார் ஆர்.வி.பாபு.
சதீசன் மறுப்பு: இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக வி.டி.சதீசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தேர்தலில் வெற்றி பெற ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியை நான் நாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். மாறாக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ரகசியத் தொடர்பு உள்ளது என்பதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி மதச்சார்பற்றதா என்று கேட்க விரும்புகிறேன்.
சபரிமலை தங்க மோசடி வழக்குகளில் தொடர்புடைய தனது தலைவர்களைக் காப்பாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயன்று வருகிறது என்று சதீசன் தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி மீது பாஜக குற்றச்சாட்டு:
தேர்தல் ஆணையம் கேரளத்தில் அண்மையில் வெளியிட்ட ஓர் ஆவணத்தில் பாஜகவின் முத்திரை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் எஸ். சுரேஷ் கூறுகையில், 'பாஜகவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மாறாக, கேரளத்தில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதை சீர்குலைப்பதற்காக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் மாநில அரசுடனும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுட னும் உடந்தையாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...