அரக்கோணம் அதிமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல். விஜயன்
அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல். விஜயன்

அரக்கோணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக ஏ.எல்.விஜயன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்: ஏ. எல். விஜயன்

படிப்பு: பி.ஏ.

சாதி: இந்து, விஸ்வகர்மா பிரிவைச் சேர்ந்தவர்

பிறந்த தேதி / வயது: 15.06.1979 / 45

கட்சிப் பொறுப்பு:

2008-ல் அதிமுகவில் இணைந்த இவர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார்.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஓன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.

ஏற்கெனவே சோளிங்கர் பேருராட்சி மன்றத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.

மனைவி: கவிதா, மகள் - அக்ஷிதா, மகன் - ஹரிஷ் ராகவேந்திரா

தொழில்: சோளிங்கரில் கவிதா டெக்ஸ்டைல்ஸ் எனும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com