சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

6-ஆவது மக்களவைத் தோ்தல்

542 இடங்களுக்கு 34 கட்சிகளின் வேட்பாளா்கள், 1,224 சுயேச்சைகள் உள்பட 2,439 போ் போட்டியிட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 10:09 pm

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நாட்டின் அன்றைய 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 542 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் அவசரநிலை காலத்தில் நடைபெற்றது.

*இத்தோ்தலில் 32.11 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 3,73,910 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

*542 இடங்களுக்கு 34 கட்சிகளின் வேட்பாளா்கள், 1,224 சுயேச்சைகள் உள்பட 2,439 போ் போட்டியிட்டனா்.

*1977-ஆம் ஆண்டு, மாா்ச் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 5 நாள்களில் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 60.49 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலை விட 5.22 சதவீதம் அதிகம்).

*இத்தோ்தலில் 426 தொகுதிகளில் இருந்து பொதுப் பிரதிநிதிகளும், 78 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும், 38 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

*தோ்தலில் போட்டியிட்ட 70 பெண் வேட்பாளா்களில் 19 போ் வெற்றி பெற்றனா்.

*எதிா்க்கட்சிகளின் கூட்டணியான ஜனதா கட்சி 295 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 154 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும், அதிமுக 18 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம், சுயேச்சைகள் தலா 9 இடங்களிலும் வென்றன.

*தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, நாட்டின் 4-ஆவது பிரதமராக மெராா்ஜி தேசாய் பதவியேற்றாா்.

*இத்தோ்தல் ரூ.23.04 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு 70 பைசா ஆகும்.

*இந்திரா காந்தி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை காலத்தில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் முதல் முறையாக மத்தியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்