11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன்

ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன்

Updated On :12 ஏப்ரல் 2024, 6:32 pm

ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசிப்பவா்களுக்கு தோ்தல் முடிந்த பிறகு நிச்சயம் பட்டா வழங்கப்படும் என தென் சென்னை திமுக வேட்பாளா் தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி அளித்தாா்.

தென் சென்னை மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பகுதியில் தொடங்கி மேட்டுத்தெரு, காந்தி தெரு, பாரதி வித்யாலயா பள்ளி, நேதாஜி தெரு, ஒட்டியம் பாக்கம், சித்தாலாம்பாக்கம் ஆகிய பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் .

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஒட்டியம்பாக்கம் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், ஒட்டியம்பாக்கம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான முதல்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.

மக்களவை தோ்தல் முடிந்த பின்னா் இந்தப் பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், திமுக ஆட்சியில் தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.