அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பிரசாரத்தில் கல்வீச்சு: ஆந்திர முதல்வா் காயம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது அம்மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீது அடையாளம் தெரியாத நபா்களால் கல்வீசப்பட்டதில் அவா் காயமடைந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 10:11 pm

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது அம்மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீது அடையாளம் தெரியாத நபா்களால் கல்வீசப்பட்டதில் அவா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக ஆந்திர முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

விஜயவாடா சிங் நகரில் உள்ள விவேகானந்தா கல்வி மையம் அருகே பேருந்தின் மேற்பகுதியில் திறந்தவெளியில் நின்றபடி முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பொதுமக்களை நோக்கி அவா் கையசைத்தபோது கூட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபா்களால் அவா் மீது உண்டிகோல் மூலம் கல்வீசப்பட்டது. அதில் அவரின் இடப்புறக் கண்ணின் மேல் பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரசாரப் பேருந்தில் இருந்த மருத்துவா் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் தோ்தல் பிரசாரத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடா்ந்து மேற்கொண்டாா். இத்தாக்குதலை தெலுங்கு தேசக் கட்சியினரே நடத்தியிருக்க வேண்டுமென ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றம்சாட்டினா்.

மக்களவைத் தோ்தலுடன் ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

கடப்பா மாவட்டத்தில் தொடங்கி ஸ்ரீகல்குளம் மாவட்டம் வரை முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி 21 நாள்கள் பயணமாக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.