மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

வீட்டுக்கு வாகனம் அனுப்பப்பட்டு வாக்கு செலுத்திய பிறகு மீண்டும் வீட்டிலேயே விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வசதியாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகளை தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்து வருகின்றது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு பேசியது:

தமிழகத்தில் மொத்தம் 6.32 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம். தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 68,000 வாக்குச்சாவடிகளில் 65 சதவிகிதம் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையில் நிற்கும் அனைவருக்கும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்படும்.

சத்யபிரதா சாகு
வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

நேற்றுவரை (ஏப்.17) தமிழகத்தில் ரூ. 173.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் ரூ. 6.67 கோடி மதிப்பில், போதைப் பொருள் ரூ.1.13 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு செல்ல வசதியாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வாகன ஏற்பாடு செய்து தரப்படும்.

வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு 15 கம்பெனி மத்திய ஆயுதப் படை வீரர்களால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும்." எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com