மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், ஓபிஎஸ் உள்பட ஓ... பன்னீர்செல்வங்கள்
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவருடன் பன்னீர்செல்வம் என்ற பெயர்கொண்ட மேலும் 5 சுயேச்சைகள் போட்டியிடுவதால், தேர்தல் களம் ஆரம்பம் முதலே பேசுபொருளாக இருந்தது.

தமிழகத்தில் இன்று 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்குச்சாவடிகளில், மின்னணு இயந்திரங்களில் இருக்கும் வேட்பாளர்களின் விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், வரிசையாக ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 22வது இடத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக ஐந்து பன்னீர்செல்வத்தில் நான்கு பேருக்கும் ஓ என்பது இனிஷியலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!
கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் அனைவரும் ஓபிஎஸ் என்றும், ஐயா ஓபிஎஸ் என்றும் பேனர்கள், பதாகைகள் வைத்து பிரசாரம் செய்ததால், மக்களுக்கே யார் எந்த பன்னீர்செல்வம் என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

அதற்கேற்றாற்போல, ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதுபோல மற்றொரு பன்னீர்செல்வத்தின் சின்னம் திராட்சையாகவும், மூன்றாம் நபரின் சின்னம் பக்கெட் எனவும் பார்க்க ஒன்றுபோல காட்சியளித்தது. பொதுவாக முக்கிய அரசியல் கட்சியின் வேட்பாளர் பெயரில் பல சுயேச்சைகள் போட்டியிடுவது வழக்கம்தான். ஆனால், இந்த அளவுக்கு இனிஷியல் கூட மாறாமல் கடுமையான போட்டிக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com