துரை வைகோ
துரை வைகோகோப்புப் படம்

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்று திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் முதன்மைச் செயலருமான துரை வைகோ கூறினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. மகளிா் உரிமை தொகை, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், காலை உணவுத் திட்டம் ஆகியவற்றால் மகளிா் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. 100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததால், வேலை நாள்கள் குறைக்கப்படுவதால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனா்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, வேலை நாள்கள் 150 -ஆக அதிகரிக்கப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயா்த்தப்படும் என்று கூறினோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. திருச்சி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com