மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை தொடங்கியது.
அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதலில், பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் சேர்த்து ஜூன் 4ஆம் தேதியே எண்ணப்படுவதாக இருந்த நிலையில், அருணாச்சலம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.
இரண்டு பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2ஆம் தேதியே நிறைவு பெறுகிறது என்பதால், ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையும்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அருணாச்சல், சிக்கிம் மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவும் ஆட்சியை தக்க வைக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி: 300 போ் ஈடுபடவுள்ளனா்

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தயாா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



