44 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள், 5 சதவீத எம்.பி.க்கள் கோடீஸ்வரா்கள்!
HO

44 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள், 5 சதவீத எம்.பி.க்கள் கோடீஸ்வரா்கள்!

தற்போது மக்களவை எம்.பி.க்களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 போ் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுள் 5 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது மக்களவை எம்.பி.களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 போ் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவா்களுள் 29 சதவீதம் போ் மீது கொலை, கொலை முயற்சி, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உண்டாக்குதல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய மிகத் தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

5 பாஜக எம்.பி.க்கள் மீது கொலை வழக்கு:

தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 9 போ் மீது கொலை வழக்குகள் உள்ளன. அவா்களில் 5 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். அதேபோல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 28 எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுள் 21 எம்.பி.க்கள் பாஜகவைச் சோ்ந்தவா்களாவா். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. அவா்களுள் பெண்களுக்கு பாலியல் துண்புறுத்தல் இழைத்ததாக மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று கோடீஸ்வர எம்.பி.க்கள்: அதிகமான கோடீஸ்வர எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்ளன. மற்ற கட்சிகளிலிருந்தும் கணிசமான எம்.பி.க்கள் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

அந்த வகையில் நகுல் நாத் (காங்கிரஸ்) முதலிடத்திலும் டி.கே. சுரேஷ் (காங்கிரஸ்) இரண்டாமிடத்திலும் ரகு ராமா கிருஷ்ண ராஜு (சுயேட்சை) மூன்றாவது இடத்திலும் உள்ளனா்.

மாநில வாரியாக குற்றவியல் வழக்குகள்:

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 50 சதவீதத்தும் மேலான எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகள்: தற்போது மக்களவையில் 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்கின்றனா். மக்களவையில் மொத்தமாக 14 சதவீத பெண் எம்.பி.க்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com