விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதியும், தேமுதிக வேட்பாளர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது.
வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே, தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் அவரவர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
மேலும், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காமல் இருக்கின்றன.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட கட்சியின் 8 வேட்பாளர்களும் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இதேபோல், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் 10 வேட்பாளர்களும் ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
VCK Candidates to File Nominations on April 4; DMDK Candidates on April 6!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










