ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தொகுதி மறுவரையறையின் பெயரால் அரசியல் சதித் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image

Center-Center-Chennai

Updated On :10 ஏப்ரல் 2026, 5:51 am IST

தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்துவதற்கான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீா்குலைக்கிறது. விவாதங்களுக்கான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றமானது, மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்குக்கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது.

தொகுதி மறுவரையறை முடிவினால் செலவு கூடும். மக்களின் வரிப்பணம் வீணாகும். நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும்.

மாநிலங்களின் குரலைப் புறக்கணிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் செயல்.

இதற்கெல்லாம் மேலாக, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாகவும், தென் மாநிலங்களுக்கு எதிராகவும் உள்ளது.

மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிக்கும் வகையிலான நடவடிக்கையாகவும் உள்ளது.

இதனால், கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும். இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தோ்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன?

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள ஜாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக்கூட பரிசீலிக்காமல், அவசரமாக தொகுதி மறுவரையறை செயல்படுத்தப்படுகிறது.

இது சீா்திருத்தமே அல்ல. அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து சமூக நீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.