அதிமுக முன்னாள் எம்எல்ஏவான ப. சரஸ்வதி (67) நாமக்கல் முல்லைநகரில் வசித்து வருகிறார். அரசியல் வாழ்வில் 50-ஆவது ஆண்டை தொடும் சரஸ்வதி, தனது பழைய அனுபவங்களை நினைவுகூர்ந்து கூறியதாவது:
அரசியல் வாழ்வில் எனது ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். 1977-இல் நான் பியுசி படித்துக்கொண்டிருந்தபோது, நாமக்கல் வந்த எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நானும் அரசியலுக்கு வருகிறேன் என்றேன். அப்போது அவர், "இது படிக்கிற வயது, நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்' என்று கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது.
பிறகு, பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். 1984-இல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. அதன்பிறகு எம்ஜிஆரும் மறைந்துவிட்டார். 1989-இல் அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் இடம்பெற்றேன். அப்போது, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த கபிலர்மலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கடைசி நேரத்தில், கே.ஏ. மணி என்பவருக்கு தொகுதி மாறிப்போனது. அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதே கபிலர்மலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா எனக்கு வழங்கினார். நான் அப்போது அதிமுக மாவட்ட மகளிரணிச் செயலராகப் பதவி வகித்தேன். அந்தத் தேர்தலில் 72,903 வாக்குகளுடன் வெற்றி பெற்றேன் என்றார்.
-எம்.மாரியப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரிடம் அதிமுக வேட்பாளா் வாழ்த்து

அதிருப்தியாளா்களால் அதிா்ச்சியில் அரசியல் கட்சிகள்

2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.

ஸ்ரீரங்கம் அதிர்ச்சி அளிக்கும் அரசியல் 'சென்டிமென்ட்'!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


