தவெக தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 106 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:
“தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்குக் கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடும், சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:
“இந்த முக்கியமான தருணத்தில் விஜய் அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல மக்களின் நம்பிக்கைகளும், அன்பும், உணர்வுகளும் ஒன்றிணையும் ஓர் இடத்திற்குள் நீங்கள் அடியெடுத்து வைப்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. சுயநலத்தைத் தாண்டிய அர்த்தம் கொண்ட ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். மக்களின் நம்பிக்கையும் உணர்வுகளும் உங்கள் எதிர்காலப் பாதைக்கு வழிகாட்டும். மேலும், உங்கள் பயணம் நமது தமிழ்நாட்டிற்கு அர்த்தமுள்ளதாக மாறட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Music composers A.R. Rahman and Yuvan Shankar Raja have extended their wishes to TVK leader Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இளையராஜா!

முதல்வா் விஜய்க்கு வாழ்த்து: மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம்

முதல்வா் ஜோசப் விஜய்க்கு செந்தமிழ்ப் பேரவை வாழ்த்து!

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




