கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி!

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான அப்பாவு தோல்வி..

Assembly Speaker Appavu trailing in Radhapuram constituency.

பேரவைத் தலைவர் அப்பாவு - DPS

Published On :

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான அப்பாவு தோல்வியை சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கையின் 24 சுற்று முடிவில் அப்பாவு 57,340 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். டாக்டர் சதீஷ் கிறிஸ்டோபர் 69,556 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 12,216 ஆகும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Appavu, the DMK candidate who contested in the Radhapuram constituency and the Speaker of the Assembly, has suffered a defeat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.