சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் தெரிய வந்துவிடும்.
இதையடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன் கூடிய தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் தொடர்ந்து அங்கு குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் தற்போதே கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Celebrations erupt outside TVK headquarters in Panaiyur as supporters gather.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



