முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!

அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் கட்சித் தாவல் நடவடிக்கையாகக் கருதப்படும்...

News image

ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி - Official Twitter page of AIADMK

Updated On :45 நிமிடங்கள் முன்பு

சென்னை : தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் தீர்மானத்தின் மீது நாளை (மே 13) சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது குழுவின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாநிலங்களவை எம்.பி. ஐ. எஸ். இன்பதுரை எச்சரித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் இன்று (மே 12) தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பேரவையில் 17 அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக பேரவையில் மொத்தம் 30 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து, எம்.பி. ஐ. எஸ். இன்பதுரை இன்றிரவில் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் :

“அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.

சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.

மகாராஷ்டிரத்தில் சிவ சேனை கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: “ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”

மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அஇஅதிமுக-இன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!” என்று அவர் பதிவிட்டு எச்சரித்துள்ளார்.

Summary

Voting in violation of the official whip's directive will be deemed an act of defection: EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.