/

ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு ராணுவ அலுவலகங்களில் பணி

ராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஆர்டிஒவில் உள்ள (டிபன்ஸ் ரிசர்ச் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன்)

Updated On :12 மே 2013, 1:23 pm IST

ராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஆர்டிஒவில் உள்ள (டிபன்ஸ் ரிசர்ச் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன்) சென்டர் பார் பெர்சனல் டேலன்ட் மானேஜ்மென்ட் பல்வேறு நிலைகளில் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 844

பல்வேறு மாநிலங்களில் டிஆர்டிஒவின் கீழ் செயல்பட்டு வருகின்ற 50க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் 360 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்-பி, 223 டெக்னீஷியன்-ஏ, 261 அட்மின் அன்ட் அலைஸ் பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி: டிப்ளமோ, அல்லது ஐடிஐயில் பிட்டர், எலெக்ட்ரீசியன், வெல்டர், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.50.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2013

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2013

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.