இந்திய கப்பல் படையியின் Logistics/works பிரிவில் பணியாற்ற திருமணமாகாத ஆண்களிடமிருந்தும் கல்வி பிரிவு மற்றும் ATS பிரிவுகளில் பணியாற்ற திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: கோர்ஸ் கமென்சிங் டிச–2013 (லாஜிஸ்டிக் கேடர், எஜுகேசன் பிராஞ்ச், ஏர் டிராபிக் கண்ட்ரோல்)
கல்வித்தகுதி:
Logistics/works பணிகளுக்கு பி.காம்,எம்.காம், பி.ஏ, எம்.ஏ. (பொருளாதாரம்), பி.பி.ஏ, எம்.பி.ஏ, பி.பி.எம், பி.இ, பி.டெக் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25க்குள் இருத்தல் வேண்டும்.
Education பணிகளுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்சி. (இயற்பியல், கணிதம்), எம்.சி.ஏ., எம்.எஸ்சி (ஆபரேசனல் ரிசர்ச், அனலிசிஸ்), எம்.எஸ்.சி. (மெட்டராலஜி, ஓசனோகிராபி, அட்மாஸ்பெரிக் சயின்ஸ்) மற்றும் எம்.ஏ. (ஆங்கிலம், வரலாறு) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றும் பி.இ.,பி.டெக்/எம்.டெக்(மெக்கானிக்கல்), கம்ப்யூட்டர்சயின்ஸ், ஐ.டி, படித்தவர்கள், எம்.டெக் (மெட்டராலஜி, ஓசனோகிராபி, அட்மாஸ்பெரிக் சயின்ஸ் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25க்குள் இருத்தல் வேண்டும்.
ATS பணிகளுக்கும் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. (இயற்பியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ்) படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடனும், எம்.எஸ்.சி. (இயற்பியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ்) படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25க்குள் இருத்தல் வேண்டும்.
உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பெண்கள் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். பார்வைத்திறன் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நிலை-1, நிலை-2 முறையில் எழுத்து தேர்வு, உளவியல் தேர்வு, கலந்துரையாடல் தேர்வு, உடற்திறன் தேர்வு, குழு தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து. அதில் ஒன்றை சான்றொப்பம் செய்த அனைத்து சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு சாதாரண அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். அதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைத்து வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்ப எண் மற்றும் பயிற்சி திட்டத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த படிவ நகல் அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No.04, Chanakyapuri, New Delhi -110021.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti_nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய் - புகைப்படங்கள்

பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? - கி.வீரமணி கேள்வி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
