தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

பெத்தி நிகழ்வில் ஏ. ஆர். ரஹ்மான் பேச்சு...

ar rahman and kareema begum

ஏ. ஆர். ரஹ்மான், அவரது தாய் கரீமா பேகம்.

Published On :

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன் தாயார் நினைவிடம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்ட பொருள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் புரமோஷன் செய்து வருகின்றனர்.

இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பெத்தி குழுவினர் படம் குறித்து பேசினர்.

அப்போது, பெத்தியின் இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான், “ஒருமுறை நடிகர் ராம் சரண் என்னைப் பார்க்க வந்தார். அப்போது, ஆலமரம் போன்ற அவரது தந்தை சிரஞ்சீவியை இவர் தாண்டுவாரா என நினைத்தேன். இன்று ஆலமரம் மாதிரிதான் ராம் இருக்கிறார். தந்தைகளின் சாம்ராஜ்யத்தை மகன்களால் கடக்க முடியாது என்பார்கள். அதனை ராம் சரண் மாற்றிக்கொண்டே வருகிறார். பெத்தி திரைப்படம் உங்களைக் கவரும் என நம்புகிறேன். இப்படத்தில் இசையமைத்த சிக்கிரி பாடல் மெக்ஸிகோவில் அங்குள்ள பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

மேலும், ஓய்வாக இருக்கும்போது என்ன செய்வீர்கள் என்கிற கேள்விக்கு, “நான் ஓய்வாக இருக்கும்போது பாடல்களைக் கேட்க மாட்டேன். என் குழந்தைகளுடன்தான் நேரம் செலவிடுகிறேன். ஏதாவது படம் பார்ப்பேன். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் என் தாயாரின் நினைவிடம்தான்.” எனக் கூறியுள்ளார்.

Music composer A.R. Rahman has spoken about his mother's memorial.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.