சென்னை: குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று புதன்கிழமை (செப்.14) கடைசி நாளாகும்.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் புதன்கிழமை (செப். 14) ஆகும். கட்டணத்தைச் செலுத்த வரும் 16-ஆம் தேதி கடைசியாகும். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


