முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்  திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு ஷிப்ட் முறையில் பணிபுரிய

Updated On :18 நவம்பர் 2016, 8:16 am IST

காஞ்சிபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்  திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு ஷிப்ட் முறையில் பணிபுரிய தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 காஞ்சிபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு ஷிப்ட் முறையில் பணிபுரிய  தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதிவாய்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் ஐடிஐ பிரிவில் வெல்டர், பிட்டர், டிரேட் ஆகிய ஏதோ ஒரு பிரிவில் முடித்து 2 வருட தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும்.
 வயது வரம்பு: பழங்குடியினர் 35, ஆதிதிராவிடர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32, பிற்படுத்தப்பட்டோர் 32, இதர வகுப்பினர் 30-க்குள் இருத்தல் வேண்டும்.  
 மேலும், காலி பணியிடங்கள் முற்றிலும் தாற்காலிகமானது. தகுந்த கல்விச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாக நவம்பர் 30 அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத விண்ணப்பங்களுக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்பட மாட்டாது.
 மேற்படி, பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். பணியிடங்களுக்கு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது. பணியிடங்களை கூட்டவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ, மாற்றியமைக்கவோ குறித்த முழு அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்பட்டது.
 மேற்கண்ட தகுதிகளையுடைய நபர்கள், துணை ஆட்சியர், மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், வந்தவாசி ரோடு, பல்லவன் நகர், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் விண்ணப்பத்தை நவம்பர் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27237135 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.