தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஏப்.9-இல் தொழிலாளர் துறை ஓட்டுநர் பணிக்கான எழுத்துத் தேர்வு

தொழிலாளர் துறையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 4:44 am

தினமணி

தொழிலாளர் துறையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் கா.பாலசந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்ளில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்களில் தலா ஒரு ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வேலூர் வசந்தபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
 தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தபால் மூலம் நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.