தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிராம உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என குத்தாலம் வட்டாட்சியர் என்.பி. இந்துமதி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2017, 4:15 am

தினமணி

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என குத்தாலம் வட்டாட்சியர் என்.பி. இந்துமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குத்தாலம் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
இப்பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு - 21 முதல் 35. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தகுதியானோர் தங்கள் விண்ணப்பத்துடன் சுய விவரம், கல்வித் தகுதிச் சான்று, குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்களுடன், குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மே 5-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
இனசுழற்சி... கிராம உதவியாளர் பணிக்கான இனசுழற்சி விவரம் (பணியிடம் :  இனசுழற்சி) :
வில்லியநல்லூர் : பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள் தவிர) - முன்னுரிமையற்றவர். சென்னியநல்லூர் :  பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்) - முன்னுரிமை பெற்றவர். தொழுதலாங்குடி : ஆதிதிராவிடர் - முன்னுரிமையற்றவர். திருநாள்கொண்டச்சேரி :  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமையற்றவர்.
கோடிமங்கலம் - பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) - முன்னுரிமையற்றவர் -பெண். மாந்தை : பொதுப் போட்டி (முன்னுரிமையற்றவர்) - பெண். திருமணஞ்சேரி : பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள் தவிர) - முன்னுரிமை பெற்றவர். பெருமாள்கோயில் : பொதுப் போட்டி (பணி ஓய்வு) - முன்னுரிமை பெற்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.