மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மருத்துவா், ஆய்வக நுட்புநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக

News image
Updated On :28 ஜூலை 2020, 2:32 am

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையோா்க ளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரப் பணிகளில் எவ்வித தடையுமின்றி செயல்படுத்த வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்களுக்கு காலியாக உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்), பி பிளாக், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேலூா் - 632 009 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு முப்படைகளில் மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.