புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு... பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர்

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 12:58 pm



பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: NR-III/FTB/2020/01

மொத்த காலியிடங்கள்: 36 

நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Field Engineer (Electrical) - 14
பணி: Field Engineer (Civil)  - 06
சம்பளம்: மாதம் ரூ.  30,000 + இதர சலுகைகள்

பணி: Field Supervisor (Electrical) - 10
பணி: Field Supervisor (Civil) - 06
சம்பளம்: மாதம் ரூ. 23,000 + இதர சலுகைகள்

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக்,  பி.எஸ்சி., டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 06.03.2020 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு லக்னோ மற்றும் அக்ராவில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: Field Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.400, Field Supervisor பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்துறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com/sites/default/files/Recruitment_for_the_post_of_FE_%26_FS_in_NR-III_on_Contract_Basis_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.