ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

25,271 காலியிடங்கள்: எஸ்எஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு இதுதான்!

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள 25,271 கான்ஸ்டபில் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 5:34 pm



மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள 25,271 கான்ஸ்டபில் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constables(CAPFS)

காலியிடங்கள்: 25,271

சம்பளம்: மாதம் ரூ.27,700 - 69,100

வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும். 

உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் உயரம் 170 செ.மீ, மார்பளவு 80 செ.மீ, இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு: ஆண்கள்: 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 

பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.