குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர், கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
தள்ளுவண்டி கடைகள் அமைக்கும் பணி 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated On :27 ஜனவரி 2021, 9:46 am

தினமணி

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர், கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர அறிவிப்பு எண் . 159 /2020 

நிர்வாகம்: சென்னை உயர்நீதிமன்றம் 

மொத்த காலியிடங்கள்:  79

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: Personal Assistant to the Hon‟ble Judges - 66
சம்பளம்: மாதம் ரூ. 56,100-1,77,500 + சிறப்பு சம்பளம்

பணி: Personal Assistant (to the Registrars) - 08
சம்பளம்: மாதம் ரூ. 36,400-1,15,700

பணி: Personal Clerk (to the Deputy Registrars) - 03
சம்பளம்: மாதம் ரூ. 20,600-65500

வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000.  இதர பிரிவைச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.