பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தான்பாத் இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 76 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தான்பாத் இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 76 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 411002/6/2021-NFR

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 73

சம்பளம்: நிறுவனத்தின் விதிமுறைகள் படி வழங்கப்படும். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 35 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீன் தேர்வு, துறைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ கலெக்ட் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nfr.iitism.ac.in/index.php/recruitment/user.login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com