ரூ.1,20,000 சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பொது மேலாளர், கூடுதல் உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்
Published on
Updated on
1 min read


சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பொது மேலாளர், கூடுதல் உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதயும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்கு வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Chennai Metro Rail Limited
வேலைவாய்ப்பு அறிக்கை எண். CMRL/HR/CON/02/2021
மொத்த காலியிடங்கள்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: General Manager (Construction) - 03
சம்பளம்: மாதம் ரூ.1,50,000 - 1,90,000/-
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Additional General Manager (Safety) - 01 
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயதுவரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Additional General Manager (Legal) - 01 
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயதுவரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி:  Additional General Manager (* QA/QC) - 01 
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயதுவரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி:  Deputy General Manager (Finance & Accounts) -02 
சம்பளம்: மாதம் ரூ.90,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில்  சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், முதுநிலை பட்டம், சட்டப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி அனுபவம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.  எஸ்சி , எஸ்டி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை M/s Chennai Metro Rail Limited என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrorail.org  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600107. 

விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை senthil.s@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-02-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com