ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


இந்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி:  Assistant Project Engineer (Civil) / Contract

காலியிடங்கள் : 45

வயதுவரம்பு:  23.12.2021 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 35,000 + இதர படிகள் வழங்கப்படும்.

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://rlda.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து psecontract@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://rlda.indianrailways.gov.in/uploads/Vacancy_RLDA_Contract_02.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com