வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 1828 அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு
By | Published On : 10th November 2021 10:53 AM | Last Updated : 10th November 2021 10:53 AM | அ+அ அ- |

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1828 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பணி: சிறப்பு அதிகாரி(Specialist Officers)
காலியிடங்கள்: 1823
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. I.T Officer - 220
2. Agricultural Officer - 884
3. Rajbasha Adhikari - 84
4. Law Officer - 44
5. HP/Personnel Officer - 61
6. Marketing Officer - 535
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக இளநிலை, முதுநிலை, எம்பிஏ, எம்எம்எஸ், பொறியியல் பட்டதாரிகள், சட்டப்பிரிவில் எல்எல்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.11.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.
முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2021
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை,மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி.
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2022
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...