கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சி இடங்கள் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களுக்கான பணியிடங்களாகும்.
விளம்பர எண். L & DC.02/2022/1
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
காலியிடங்கள்: 369
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 60
2. Turner - 22
3. Welder - 55
4. Mechanic (Motor Vehicle) - 60
5. Mechanic (Diesel) - 10
6. Mechanic (Tractor) - 05
7. Electrician - 62
8. Wireman - 55
9. Carpenter - 05
10. Plumber - 05
11. Stenographer - 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.10,019 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சியின் பெயர்: Non Engineering Apprentice
காலியிடங்கள்: 105
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. PASAA - 20
2. Commerce - 25
3. Copmputer Science - 35
4. Computer Application - 20
5. Business Administration - 20
6. Geology - 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, பட்டப்படிப்பிலி பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் 23.09.2022 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பொது மேலாளர், நிலம் எடுப்பு அலுவலகம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம். நெய்வேலி - 607 803
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24,08.2022
விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 31.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/NET%20ADVERT-TRADE%20and%20NON%20ENGINEERING%20%20-PAPs.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் வெடிமருந்து தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சி!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் டிரெய்னி பணி!

ரூ.1,60,000 சம்பளத்தில் வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


