டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செயில் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பிலாய் எஃகு ஆலையின் மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவத்துறையைச் சேர்ந்த பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
sail053747
Updated On :4 பிப்ரவரி 2022, 7:52 am

தினமணி

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பிலாய் எஃகு ஆலையின் மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவத்துறையைச் சேர்ந்த பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Super Specialist (Cardiology) - 01
சம்பளம்: மாதம் ரூ.2,00,000

பணி: General Medicine - 03
பணி: Orthopaedics - 01
பணி: Critical Care Medicine
(Intensivist) - 02
சம்பளம்: மாதம் ரூ. 90,000 - 1,20,000

பணி: Transfusion
Medicine - 01
சம்பளம்: மாதம் ரூ. 1,20,000

பணி: General Duty
Medical Officers (GDMOs) - 06
சம்பளம்: மாதம் ரூ. 70,000 - 77,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 07.02.2022 தேதியின்படி 69 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 07.02.2022 அன்று காலை 10 மணிக்கு Human Resource Development Centre, (Near BSP Main Gate), Bhilai Steel Plant, Bhilai 490001 

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை நேர்முகத்தேர்வு வரும் போது கொண்டுவர வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1H1imKDhHJkhfRvvLz89GILUMcZN5Hoq0/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.