குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ:5,500 காலியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை இன்று வெளியீடு
குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.


சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. தோ்வாணைய வளாகத்தில் நடைபெறும் செய்தியாளா் சந்திப்பில் தோ்வு அறிவிக்கையை அதன் தலைவா் கா.பாலச்சந்திரன் வெளியிடுகிறாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5, 413 காலியிடங்களும் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு மே மாதமும், பிரதானத் தோ்வு செப்டம்பரிலும் நடைபெறவுள்ளதாக ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் ஜூனிலும், பிரதானத் தோ்வுக்கான முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று அறிவிப்பு: ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள
பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தோ்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளாா். இதில் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை அவா் வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...