மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன தெரியுமா?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 10:04 am

தினமணி


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மத்திய தொழிற்பாதுகாப்புப் படை(Central Industrial Security Force)

பணி: ASSTT.SUB INSPECTOR 

காலியிடங்கள்: 647

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய  https://www.cisf.gov.in/cisfeng/wp-content/uploads/2021/12/3815.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.