எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக 8,700 இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:16 pm IST

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக 8,700 இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் நிரப்பப்பட உள்ள 8,700 இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை (ஜன.28) 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும். 

காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: Army Welfare Education Society

மொத்த காலியிடங்கள்: 8,700 

பணி: TGT(Trained Graduate Teachers)

பணி: PGT (Post Graduate Teacher)

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். இளநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்து மத்திய, மாநில அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டும் CTET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் 40க்குள்ளும், 5 ஆண்டுக்கு அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள் 57க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு கட்டணம்: ரூ.385. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: Army Welfare Education Society நடத்தும் ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் கற்பிக்கும் திறன், கணினி பயன்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.register.cbtexams.in/AWES/Registration என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2022 மற்றும் 20.02.2022

தேர்வு நுழைவுச் சீட்டை 10.02.2022 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர்

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 28.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.