எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.89 ஆயிரம் சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை!

அந்நியச் செலாவணி ஒழுங்கு முறை ஆணையத்தில்(செபி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2022, 9:06 am

தினமணி


அந்நியச் செலாவணி ஒழுங்கு முறை ஆணையத்தில்(செபி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Manager

காலியிடங்கள்:  24

சம்பளம்: மாதம் ரூ.44,500 - 89,350

வயதுவரம்பு: 30.06.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ முடித்து கம்ப்யூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். 

முதல் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி: 27.08.2022

இரண்டாம் கட்டத் தேர்வு 24.09.2022

முதல் கட்டத் தேர்வு சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களிலும், இரண்டாம் கட்டத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.