சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர்(பெண்கள் மட்டும்) பதவிகளுக்கு காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 16 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 11
தகுதி: பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் அல்லது சைக்காலஜியில் முதுகலை பட்டம், சமூகவியல், குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணியியல், மறுவாழ்வு அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.
கட்டணம்: நிரந்த பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்: 05.11.2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/15_2022_AD_Social_Welfare_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
கணக்கு அலுவலர் நிலை- III பதவி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
குரூப் 1 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு
பொதுத்துறை நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
எஸ்எஸ்சி-இன் 2,268 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



