விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
Published on
Updated on
1 min read

 
தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Principal - 01
சம்பளம்: மாதம் ரூ.49,000
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Professor -08
பணி: Physical Education Director - 01
பணி: Librarian - 01
தகுதி: வரலாறு, பொருளாதாரம், உடற்கல்வி போன்ற துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நெட், செலட், செட், பிஎச்.டி இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: Finance & Accounts Manager - 01
பணி: Assistant - 02
பணி: Junior Assistants - 02
பணி: Computer Programmer - 01
பணி: Typist - 01
பணி: Security - 02
பணி: Office Assistants - 02

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு மற்றும் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு தமிழில் 25 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் செக்யூரிட்டி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Additional Registrar, Managing Director, Tamilnadu Co-Operative Union, Chennai - 10

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com