மத்திய அணுசக்தி துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அணுசக்தி துறையின் கட்டுமானம், சேவைகள் மற்றும் எஸ்டேட் மேலாண்மை இயக்குநரகத்தில் காலியாக உள்ள 33 டெக்னிக்கல் அலுவலர், டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அணுசக்தி துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read

மத்திய அணுசக்தி துறையின் கட்டுமானம், சேவைகள் மற்றும் எஸ்டேட் மேலாண்மை இயக்குநரகத்தில் காலியாக உள்ள 33 டெக்னிக்கல் அலுவலர், டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். DCSEM/ 01 /2022

மொத்த காலியிடங்கள்: 33 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technical Officer/C (Civil) - 02
பணி: Technical Officer/C (Mechanical) - 01
பணி: Scientific Assistant/B (Civil) - 06  
பணி: Scientific Assistant/B (Mechanical) - 02
பணி: Scientific Assistant/B (Electrical) - 02
பணி: Technician/B (Plumbing) - 04
பணி: Technician/B (Carpentry) - 04
பணி: Technician/B (Masonry) - 02 
பணி: Technician/B (Fitter) - 02 
பணி: Technician/B (AirConditioning) - 02
பணி: Technician/B (Electrical) - 06 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 29.04.2022 தேதியின்படி, டெக்னிக்கல் பணிக்கு 35க்குள்ளும், சயின்டிபிக் பணிக்கு 30க்கும், டெக்னீசியன் பணிக்கு 25 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு, டிரேடு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: டெக்னிக்கல் பணிக்கு ரூ.500, சயின்டிபிக் பணிக்கு ரூ.300, டெக்னீசியன் பணிக்கு ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: http://dcsem.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Personnel Officer, Recruitment Section, Directorate of Construction, Services & Estate Management, 2 nd floor, Vikram Sarabhai Bhavan, Anushaktinagar, Mumbai - 400 094

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிநாள்: 29.04.2022

மேலும் விவரங்கள் அறிய http://dcsem.gov.in/resources/uploads/advertisements/Advt_01_2022_14882560061648202587.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com