பரோடா வங்கியில் ஆபீசர் வேலை வேண்டுமா..?- உடனே விண்ணப்பிக்கவும்!
By | Published On : 23rd April 2022 12:22 PM | Last Updated : 23rd April 2022 12:22 PM | அ+அ அ- |

பரோடா வங்கியின் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 26 மார்க்கெட்டிங்க் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: Agriculture Marketing Officers
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. பாட்னா - 04
2. சென்னை - 03
3. மங்களூரு - 02
4. தில்லி - 01
5. ராஜ்கோட் - 02
6. சண்டிகார் - 04
7. எர்ணாகுளம் - 02
8. கொல்கத்தா - 03
9. மீரட் - 03
10. அகமதாபாத் - 02
வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.
தகுதி: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, பால், மீன்வளம் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பணி அனுபவம் விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த துறைகளின் தேவையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2022
மேலும் விவரங்கள் அறிய www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்தகொள்ளவும்.