மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Center for Materials from Electronics Technology நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : Center for Materials from Electronics Technology (C-MET)
பணியிடம்: புனே, ஹைதராபாத், திருச்சூர் ஆய்வகம்
பணி: Technical Consultant/ Research Scientist
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.90,000
தகுதி: Physics, Chemistry, Material Sciences, Chemical Engineering, Ceramics, Nanomaterials, Material Sciences Engineering, Electrical Engineering, Metallurgy போன்ற ஏதாவதொரு துறையில் எம்இ, எம்.டெக், முன்னைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரயில்வேயில் 2,422 வேலைவாய்ப்புகள் அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு
அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://cmet.gov.in/jobs எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, பிரிவினர் ரூ.400 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022
மேலும் விவரங்கள் அறியவும் https://cmet.gov.in/ அல்லது https://cmet.gov.in/sites/default/files/jobs/Technical_Consultant_Research.pdf என்ற லிங்க்கை கிளிக்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

