நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 19th March 2022 02:22 PM | Last Updated : 19th March 2022 02:22 PM | அ+அ அ- |

நாகப்பட்டினம் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் விவரங்கள்:
பணி: அலுவலக உதவியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 18 முதல் 34க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது "வேலை வாய்ப்பு விண்ணப்பம் - அலுவலக உதவியாளர்" என்று குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 543, பப்ளிக் ஆபீஸ் ரோடு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2022
மேலும் விவரங்கள் அறிய www.nagapattinam.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/03/2022031833.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...