ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 11:53 pm

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவுப்பு எண். CMRL/HR/CON/05/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: DM/AM

பிரிவு: Planning - 2

பிரிவு: Quantity பிரிவு: Surveyor - 3

பிரிவு: Civil - 3

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Architect - 2

தகுதி: பி.ஆர்க் முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.62,000

பணி: Assistant Manager(Mechanical) - 1

தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.75,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.