
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ், ஹைதராபாத்(Security Printing Press)-இல் காலியாக உள்ள சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.01/2024 தேதி: 15.3.2024
பணி: Supervisor
பிரிவு: TO-Printing
காலியிடங்கள்: 2
தகுதி: பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Tech Control
காலியிடங்கள்: 5
தகுதி: பிரிண்டிங், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: OL
காலியிடங்கள்: 1
தகுதி: ஹிந்தி, ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழிபெயர்ப்பு செய்வதில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Jr.Office Assistant
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 40 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Technician
பிரிவு: Printing/Control
காலியிடங்கள்: 68
தகுதி: பிரிண்டிங்க் டெக்னாலஜி பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Fitter - 3
பிரிவு: Welder - 1
பிரிவு: Electronics,Instrumentation - 3
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Fireman - 1
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பையர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீட்டரும், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். நல்ல பார்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://spphyderabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.