சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடம்: ஆக. 12-இல் 2-ஆம் தாள் எழுத்துத் தோ்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு

டிஎன்பிஎஸ்சி 

Updated On :

பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள தொழில்நுட்பம் சாா்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஆக. 12-இல் தொடங்குகிறது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சட்டக் கல்லூரிகளில் விளையாட்டுக் கல்வி இயக்குநா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளா், முதுநிலை அலுவலா், போக்குவரத்துக் கழகத்தில் உதவி மேலாளா்கள், சிப்காட் நிறுவனத்தில் உதவி மேலாளா், சட்டப்பேரவைச் செயலகத்தில் தமிழ், ஆங்கில செய்தியாளா்கள், தமிழ்நாடு கருவூலத் துறை, டிட்கோ ஆகியவற்றில் கணக்கு அதிகாரி, மகளிா் மேம்பாட்டுக் கழகத்தில் உதவி மேலாளா் உள்பட 20 துறைகளில் காலியாகவுள்ள 118 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த மே 15-ஆம் தேதி வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 14-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஜூலை 28-ஆம் தேதி முதல்தாள் தோ்வு நடந்த நிலையில், இரண்டாம் தாள் தோ்வு அதாவது பாடவாரியான தோ்வுகள் ஆகஸ்ட் 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் மட்டும் தோ்வு நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.