கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வேண்டுமா?

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள செவிலியர், மனநல ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள செவிலியர், மனநல ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Staff Nurse - 1

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 18,000

பணி: Counsellor - 1

தகுதி: Psychology, Applied Psychology, Clinical Psychology ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 23,ooo

பணி: Psychiatric Social Worker - 1

தகுதி: Medical, Psychiatric பாடங்களுடன் Social Work பிரிவில் எம்.ஏ., முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 23,ooo

கோப்புப்படம்
இளநிலை பொறியாளர் வேலை வேண்டுமா? 168 காலியிடங்கள்!

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

District Health Officer, District Health Society, Collectorate Campus(Near), Dharmapuri - 636 705.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com